ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்களுக்கான புதிய விதிமுறைகள்

#Tourist #Travel #England #European
Prasu
2 months ago
ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்களுக்கான புதிய விதிமுறைகள்

பிரெக்சிட்டிற்குப் பிறகு, பிரித்தானிய பயணிகளுக்கு ஐரோப்பாவில் பயணம் செய்யும் விதிமுறைகள் தொடர்ந்து மாற்றம் காண்கின்றன.

தற்போது, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, மால்டா மற்றும் கிரீஸ் போன்ற பிரபல சுற்றுலா நாடுகளுக்கு பிரித்தானியாவிலிருந்து செல்லும் பயணிகள் ETIAS (European Travel Information and Authorisation System) மூலம் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

EES (Entry-Exit System) - இது பாஸ்போர்ட் முத்திரை முறையை நீக்கி, பயணிகளின் உள்நுழைவு மற்றும் வெளியேற்ற விவரங்களை மின்னணு முறையில் சேமிக்கிறது.

ETIAS - ஐரோப்பாவில் விசா தேவையில்லாத பயணிகளுக்கான புதிய பதிவு. பிரித்தானியர்கள் இதில் பதிவு செய்ய 6 பவுண்டுகள் கட்டணம் (18-70 வயதுக்குள் உள்ளவர்களுக்கு) செலுத்தவேண்டும்.

இந்த பதிவு 3 ஆண்டுகள் செல்லுபடியாகும். பயணத்துக்கு சில வாரங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். இந்த மாற்றங்கள், பயண மேலாண்மையை நவீனமாக்குவதோடு, பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும் உதவும்.

அதனால், ஐரோப்பாவிற்கு பயணம் செய்ய உள்ள பிரித்தானியர்கள் இந்த புதிய விதிமுறைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!