ஆஸ்திரியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு
#Death
#Attack
#Asylum Seekers
#Austria
Prasu
1 month ago

ஆஸ்திரியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இத்தாலி மற்றும் ஸ்லோவேனியாவின் எல்லைக்கு அருகிலுள்ள வில்லாச் நகரில் சாலையில் சென்றுகொண்டிருத்தவர்களை இளைஞன் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான்.
ஆஸ்திரியாவுக்கு புலம்பெயர்ந்த 23 வயது சிரியா நாட்டு வாலிபர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை போலீசார் இன்னும் கண்டறியவில்லை. மேலும் அந்த நபரின் பின்னணி குறித்த தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



