மாலியில் சட்டவிரோத தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 48 பேர் பலி
#Death
#Accident
#Mine
#Mali
Prasu
1 month ago

மேற்கு மாலியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 48 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்பிரிக்காவின் முன்னணி தங்க உற்பத்தியாளர்களில் மாலியும் ஒன்று. மேலும் சுரங்கத் தளங்கள் தொடர்ந்து நிலச்சரிவுகளால் விபத்துகளுக்கு ஆளாகின்றன.
"சுரங்கத்தில்1800 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், சரிவைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. நிலை தடுமாறி சரிந்தவர்களில் சிலர் தண்ணீரில் விழுந்தனர். அவர்களில் ஒரு பெண் தனது முதுகில் குழந்தையை வைத்திருந்தார்," என்று ஒரு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



