அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துங்கள் : மக்களிடம் கோரிக்கை!
#SriLanka
#people
#water
Thamilini
10 months ago
நாட்டில் தற்போது நிலவும் வரண்ட வானிலை காரணமாக சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும், ஆனால் மக்களின் நீர் நுகர்வு அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, வாகனங்களை கழுவுதல், தோட்டக்கலை போன்ற நடவடிக்கைகளுக்கு நீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, தேவையான அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்