மணிக்கு 38,028 மைல்கள் பயணித்து பூமியை நோக்கி வரும் சிறுகோள் : ஆபத்தில் சிக்கும் 100 மில்லியன் மக்கள்!
பூமியை நோக்கி வரும் இராட்சத கோள் பற்றி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2024YR4 என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த சிறுகோளானது வியக்கவைக்கும் வேகத்தில் பயணித்து வருவதாகவும், வினாடிக்கு சுமார் 17 கிலோமீட்டர் - அல்லது மணிக்கு 38,028 மைல்கள் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கோள் பூமியை தாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாக முன்பு கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய தகவல்கள் அந்த கணிப்புக்கு முரணாக வந்துள்ளது.
அதாவது குறித்த சிறுகோளானது ஒரு தசாப்தத்திற்குள் சுற்றி சுழன்று மீண்டும் பூமியை நோக்கி வரும் என எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிறுகோள் பூமியை தாக்கினால் 500 அணுகுண்டுகளுக்கு சமமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இதனால் 100 மில்லியன் மக்கள் ஆபத்தில் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்