டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்குக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

#Protest #America #ElonMusk #Trump
Prasu
1 month ago
டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்குக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

அமெரிக்காவின் அதிபாராக 2 ஆவது முறையாக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். 

தேர்தலில் அவருக்காக அதிக செலவுகளை செய்து ஆதரவு அளித்த உலக பணக்காரார் எலான் மஸ்க், அரசின் செயல்திறன் மேம்பாடு DODGE என்ற புதிய துறைக்கு தலைவரானார்.

இந்த துறைக்கு அமெரிக்க மக்களின் பாதுகாக்கப்பட்ட தகவல்களை அணுகுதல் உள்ளிட்ட ஏகபோக உரிமைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்குக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது. 

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி அமெரிக்காவில் பிரசிடெண்ட்ஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நாடு முழுவதும் விடுமுறை உண்டு. அமெரிக்க அதிபராக இருந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு மக்கள் நன்றி செலுத்துவர்.

ஆனால் இந்த வருட பிரசிடெண்ட்ஸ் டேவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.

50501 என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், 'அதிபர் நாளில் அரசர் வேண்டாம்' என்ற பதாகைகளுடன் நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த இயக்கத்துக்கு 50 ஆர்ப்பாட்டங்கள், 50 மாநிலங்கள், 1 இயக்கம் என்று பொருள்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!