தாய்லாந்து-மியான்மர் எல்லைப் பகுதியில் 270 வெளிநாட்டினர் கைது

#Arrest #Thailand #Myanmar #Border
Prasu
1 day ago
தாய்லாந்து-மியான்மர் எல்லைப் பகுதியில்  270 வெளிநாட்டினர் கைது

தாய்லாந்தை ஒட்டிய மியன்மார் எல்லைப் பகுதியில் மோசடிச் சம்பவங்கள் நடைபெறுவதாகச் சந்தேகிக்கப்படும் நிலையங்களிலிருந்து 273 வெளிநாட்டவர்களை மியன்மார் அதிகாரிகள் தடுத்துவைத்தனர்.

தாய்லாந்துக்கும் மியன்மாருக்கும் இடையே உள்ள எல்லைப்பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத இணைய மோசடிகளை ஓடுக்கும் நடவடிக்கைகளை மூத்த சீன அதிகாரி ஒருவர் மேற்பார்வையிட்டார்.அதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.

மோசடி கும்பல்களால் கடத்தப்பட்ட லட்சக்கணக்கான மக்கள், தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதி உட்பட தென்கிழக்கு ஆசியா முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மோசடி நிலையங்களில் வேலைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

பல ஆண்டுகளாக இந்த மோசடி நிலையங்கள் செயல்பட்டு வந்தாலும், தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடத்தப்பட்ட சீன நடிகர் வாங் ஜிங் மீட்கப்பட்டு, சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட பிறகே இவற்றின் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!