2025ம் ஆண்டு கும்ப ராசியினருக்கான சனி பெயர்ச்சி பொதுப்பலன்

#Astrology #Rasipalan
Prasu
1 day ago
2025ம் ஆண்டு கும்ப ராசியினருக்கான சனி பெயர்ச்சி பொதுப்பலன்

கும்ப ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் சனிப்பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 2ம் வீட்டில் நடக்கும். இந்த பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று நிகழும், மற்றும் சனி ஜூன் 3, 2027 வரை மீனத்தில் இருக்கிறார்.


உங்கள் இயல்பான ஒழுக்கமும், யதார்த்தமான செயல்பாடும், கவனத் திறனும்  இந்த காலக்கட்டத்தில் வெளிப்படலாம். மனச்சோர்வு, பற்றின்மை, மற்றும் தடைகள் போன்ற சிரமங்களை நீங்கள் சமீபத்தில் சந்தித்திருந்தாலும், அவை எல்லாம் மாறக் கூடிய காலக்கட்டமாக இந்த பெயர்ச்சி  அமையும்.

பொருளாதார நிலை திருப்தி  அளிக்கும் வகையில் இருக்கும்.  இந்த காலக்கட்டத்தில் சில சவால்கள் எழுந்தாலும் நீங்கள் திறமையுடன் அவற்றை சமாளிப்பீர்கள்.  மன அமைதியயை மேற்கொள்ளுங்கள்.  பிரார்த்தனை மற்றும் தியானம் மூலம் நீங்கள் மன அமைதி பெற முடியும். உங்கள் சாவல்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.

உத்தியோகம் :
நீங்கள் ஏழரை சனியின் கடைசி கட்டத்தில் இருக்கிறீர்கள். பணியிடத்தில் நீங்கள் சில  சவால்களை சந்திக்க நேரிடும். பணிகள் மலை போல குவிந்து காணப்படும்.

திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை முடிக்க முடியும். ஏழரை சனியின் தாக்கம் இன்னும் இருப்பதால், உங்கள் பணிச்சூழலில் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவரையும் நம்பாமல் எச்சரிக்கையாக இருப்பது புத்திசாலித்தனம்.

நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். உழைப்பிற்கேற்ற நற்பலனை நீங்கள் அனுபவிக்கலாம். நீங்கள் ஒரு தொழில் மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அதற்கான நடவடிக்கையை இப்போதே தொடங்கலாம்,

ஆனால் அதே நேரத்தில், புதிய நிறுவனம், உங்கள் பதவி  மற்றும் பொறுப்புகள் மற்றும்  நிர்வாக எதிர்பார்ப்புகள் பற்றிய அனைத்து சாத்தியக்கூறுகளையும்  ஆராய்ச்சி செய்யுங்கள். இவற்றைச் செய்வதன் மூலம், நீங்கள் நல்ல நிலையில் இருக்க முடியும் மற்றும் உங்கள் உத்தியோகம் சார்ந்த சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.

காதல் / குடும்ப உறவு :
உறவில் உங்கள் தகவல் தொடர்பு திறன் மேம்பட்டு இருக்கும். உங்கள் குழந்தைகளுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை உங்களால் திருப்திபடுத்த முடியாமல் போகலாம். உறவில் அனுசரித்தும் விட்டுக்கொடுத்தும் நடந்து கொள்ள  முயலுங்கள்.

மேலும், பிறருடன் பேசும் போது உங்கள் பேச்சில் கவனம் தேவை. தவறான புரிதல்கள் அல்லது எதிர்மறைகளைத் தவிர்க்க உங்கள் வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுப்பது நல்லது. சகோதர சகோதரிகளின்  உறவுகள் இப்போது  சுமுகமாக இருக்க வாய்ப்பில்லை. 

ஒற்றையர், புதிய உறவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருங்கள். தவறான நோக்கங்களைக் கொண்ட ஒருவரை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. நெருங்கி பழகுவதற்கு முன் யோசித்து ஆராய்ந்து செயல்படுங்கள்.

திருமண வாழ்க்கை :-
திருமணத்திருக்கு காத்திருப்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கலாம். நல்ல செய்தி உண்டு. உங்களுக்கேற்ற சரியான துணையை நீங்கள் சந்திக்கலாம்.  

பிரிந்து இருக்கும் தம்பதிகள் கடந்தகால காயங்களை பரஸ்பரம் மன்னித்து, நெருக்கமாகலாம்.  குடும்பத்துடன் இணைந்திருக்கவும், தரமான நேரத்தை ஒன்றாக அனுபவிக்கவும் இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும்.

கருத்து வேறுபாடுகளைக் களைந்து புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதன் மூலம் சுமுக உறவை பராமரிக்கலாம். குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன். பொறுமையாக இருங்கள் மற்றும் உங்கள் பிணைப்பை வலுப்படுத்த ஒளிவு மறைவு  இன்றி பழகுங்கள்.

நிதிநிலை :-
உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு பணம் இருக்கலாம். செலவுகள் அதிகமாக இருக்கலாம். கட்டுபடுத்த வேண்டும். ஆடம்பர செலவுகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். பணத்தை சேமிக்க வேண்டும். எதிர்கால பாதுகாப்பு நலன் கருதி நீங்கள் முதலீடு மேற்கொள்ள நினைக்கலாம். இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன் முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் நீங்கள் விதிமுறைகளை முழுமையாகப் புரிந்துகொண்டால் மட்டுமே தொடரவும்.தொழில் சார்ந்த  ஒப்பந்தங்கள் நம்பிக்கை தரும் வகையில் இருக்கலாம்.  வணிக விரிவாக்கத்திற்கான கடன்களை பரிசீலிப்பவர்கள் அல்லது நிதி தேவைகளுக்காக சொத்துக்களை விற்பவர்கள் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

பொதுவான பரிந்துரையாக, விரைவான பலன் தரும் திட்டங்கள் அல்லது அபாயகரமான வர்த்தகம் போன்ற குறுக்குவழிகளைத் தவிர்க்கவும்.

மாணவர்கள் :-
மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். கவனச் சிதறல் குறைந்த மதிப்பெண்களுக்கு வழிவகுக்கும். மனதை ஒருமுகப்படுத்தி கவனத்திறனை மேம்படுத்த வேண்டும். வெளிநாட்டில் படிக்க விரும்புவோருக்கு,

உங்கள் கனவுகள் நனவாகும். நீங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும் மற்றும் ஆர்வத்துடன்  செயல்பட வேண்டும். தெளிவான இலக்குகளை அமைத்து அதன்படி திட்டமிட்டு செயலாற்றவும்.  அமைதியான மற்றும் கவனச்சிதறல் இல்லாத படிப்பு இடத்தைக் கண்டறியவும். பாடங்கள் பெரிதாக இருந்தால்  சிறு சிறு பகுதிகளாக பிரித்து படிக்கவும்.

உங்கள் இலக்கை அடைந்து வெற்றி காண்பீர்கள். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன், நீங்கள் எந்த தடைகளையும் சமாளிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். முன்னேற்றம் தானாகக் கிட்டும்.

ஆரோக்கியம்:-
இந்த காலக்கட்டத்தில் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். என்றாலும் அதனை தக்க முறையில் பராமரிக்க வேண்டும்.  குறிப்பாக நாள்பட்ட நோய்  உள்ளவர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தேவைபட்டால் மருத்தவ சிகிச்சை மேற்கொள்ளவும்.

உணவு முறையில் கவனம் தேவை.  நடைபயிற்சி, யோகா அல்லது தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.  

இது உங்கள் நல்வாழ்வை கணிசமாக மேம்படுத்தும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள் மற்றும் பாதுகாப்பான வேகத்தை பராமரிக்கவும். பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவில் கவனம் செலுத்துங்கள்.

இவை உங்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றலை வழங்க முடியும். முதுகு மற்றும் முழங்கால் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். மன அழுத்தத்தைத் தவிருங்கள் நீங்கள் தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்படலாம். எனவே, முறையான ஒய்வு மற்றும் தூக்கம் மேற்கொள்ளவும்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!