கோவையில் பாலியல் குற்றச்சாட்டில் யோகா ஆசிரியர் கைது
#India
#Arrest
#Sexual Abuse
#Teacher
Prasu
1 month ago

கோவை வடவள்ளி அருகே உள்ள கோல்டன் நகரைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 54). இவர் கோவை நகரின் மத்தியில் உள்ள பிரபல பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் மாணவ-மாணவிகளுக்கு யோகாவும் கற்றுக் கொடுத்தார்.
ஆசிரியர் ராஜன், யோகா பயிற்சியின்போது தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், தொடக்கூடாத இடங்களில் தொட்டு பேசுவதாகவும் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி முதல்வர், காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார், ஆசிரியர் ராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



