நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் அர்ஜென்டினா ஜனாதிபதி

#Parliament #President #Argentina #Vote #confidence
Prasu
1 month ago
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் அர்ஜென்டினா ஜனாதிபதி

அர்ஜென்டினாவில் அதிபர் ஜேவியர் மிலே தலைமையிலான வலதுசாரி லிபர்டி அட்வான்சஸ் கூட்டணி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. 

இவர் லிப்ரா என்ற கிரிப்டோகரன்சி குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சிறு வணிகங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு நிதியளிக்க லிப்ரா உதவும் என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அதனை வாங்குவதற்கான இணைப்பையும் அதில் பகிர்ந்து கொண்டார். இதனால் அந்த பங்கின் விலை உயர்ந்தது. இதன்மூலம் கிரிப்டோகரன்சியை விளம்பரப்படுத்துவதாக கூறி அதிபருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. 

எனவே சில மணி நேரங்களில் எக்ஸ் தளத்தில் இருந்து அந்த பதிவை ஜேவியர் மிலே நீக்கினார். இதனால் முதலீட்டாளர்கள் பலர் தங்களது பணத்தை இழந்தனர். 

இதனை தொடர்ந்து அதிபர் ஜேவியர் மிலேவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவும் பிரதான எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!