நானுஓயா ரயில் நிலையத்திற்கு வெளிநாட்டவர்களை அழைத்து சென்ற முச்சக்கரவண்டி விபத்து!

#SriLanka #Accident #NuwaraEliya
Thamilini
10 months ago
நானுஓயா ரயில் நிலையத்திற்கு வெளிநாட்டவர்களை அழைத்து சென்ற முச்சக்கரவண்டி விபத்து!

நுவரெலியாவிலிருந்து நானுஓயா ரயில் நிலையத்திற்கு இரண்டு வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (20) காலை 8 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா, பங்கலாவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

முன்னால் சென்ற பேருந்தை கவனக்குறைவாக முந்திச் செல்ல முயன்றபோது, ​​மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

பொதுமக்களுடைய நன்மை கருதி 
லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!