500,000 மனித பறவை காய்ச்சல் தடுப்பூசிகளை கொள்வனவு செய்த கனடா

#Canada #Disease #Birds #Vaccine
Prasu
1 month ago
500,000 மனித பறவை காய்ச்சல் தடுப்பூசிகளை கொள்வனவு செய்த கனடா

கனடாவில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடா மொத்தம் 500,000 மனித பறவை காய்ச்சல் (Bird Flu) தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது.

எதிர்ப்பாராத நிலைமைகளுக்கு தயாராக இருப்பது முக்கியம் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் மருந்துப் பொருள் நிறுவனம் GSK தயாரித்த இந்த தடுப்பூசிகள், அவசியமான தருணங்களில் பயன்படுத்த முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கையாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் தற்போது குறைவாக உள்ளது என்று பொது சுகாதார நிறுவனம் கூறினாலும், அதிகப் பாதிப்பு அடையக்கூடிய நபர்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!