ஆந்திரப் பிரதேசத்தில் மகனை ஐந்து துண்டுகளாக வெட்டி கொலை செய்த தாய்

துப்புரவுப் பணியாளராக வேலை செய்த 35 வயது மகனை, 57 வயது தாயார் கொன்றதாக பிரகாசம் காவல்துறைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் வட்டாரத்தில் குடும்பத்தாரின் உதவியோடு தன் மகனைக் கொன்று உடலை ஐந்து பகுதிகளாக வெட்டிச் சிதைத்ததாகக் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
“காமப் பார்வை கொண்ட மகனின் முறைகேடான நடத்தையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் கொன்றுவிட்டார்,” என்று தயார் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத், கம்மம், பெங்களூரு ஆகிய ஊர்களில் உள்ள தன்னுடைய உறவினர்களிடம் திருமணமாகாத ஷியாம் பிரசாத் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.தன் தாயாரின் சகோதரிகளைப் பாலியல் ரீதியாகத் தாக்கியதாகவும் நம்பப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



