அர்ச்சுனாவுக்கு எதிராக பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழு விசாரணை
#SriLanka
Mayoorikka
18 hours ago

பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழு, பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இன்று (21), பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், “பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனவுக்கு எதிரான புகார்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சிறப்புரிமைகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்” என்று, சபாநாயகர் கூறினார்.
அர்ச்சுனவை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹேமாலி வீரசேகர, விஜித ஹேர்த் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் அடங்குவர் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



