மித்தெனிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம்! பொலிஸ் உள்ளடங்களாக மூவர் கைது! பொது பாதுகாப்பு அமைச்சர் தகவல்

#SriLanka #Arrest #Police #Crime
Mayoorikka
10 months ago
மித்தெனிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம்! பொலிஸ் உள்ளடங்களாக மூவர் கைது! பொது பாதுகாப்பு அமைச்சர் தகவல்

மித்தெனிய-கடேவத்த சந்தியில் தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

 இன்றையதினம்(21) நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் அடங்குவதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த 18 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 39 வயது தந்தை, அவரது 6 வயது மகள் மற்றும் 7 வயது மகன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

 துபாயை தளமாகக் கொண்ட ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!