கொட்டாஞ்சேனையில் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொலை!
#SriLanka
#Police
#GunShoot
Thamilini
10 months ago
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை அடையாளம் காணுவதற்கு சந்தேகநபர்களை அழைத்துச் சென்ற நிலையில், அவர்களில் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.
இதில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் சந்தேகநபர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்