கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி தகுதி நீக்கம்

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தான் கனடா பிரதமர் பதவிக்காக போட்டியிட இருப்பதாக இந்திய வம்சாவளியினரான சந்திரா ஆர்யா தெரிவித்திருந்தார்.
ஆனால், ஜஸ்டின் ட்ரூடோவின் லேபர் கட்சி, கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட, அவருக்கு அனுமதி மறுத்துவிட்டது. பின்னர், ரூபி தல்லா என்னும் இந்திய வம்சாவளியினர் கனடா பிரதமர் பதவிக்காக போட்டியிட இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரையும் ஜஸ்டின் ட்ரூடோவின் லேபர் கட்சி, கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடவிடாமல் செய்துள்ளது.
தலைமைப் பதவிக்கு போட்டியிடுவதிலிருந்து தான் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோவின் லேபர் கட்சி சற்றுமுன் அறிவித்ததாக ரூபி தெரிவித்துள்ளார்.
தான் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த செய்தியுடன், அந்த அறிவிப்பு ஊடகங்களுக்கு லீக் செய்யப்பட்டதாலும் தான் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக ரூபி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



