பிரான்ஸின் 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு
#Warning
#Climate
Prasu
8 hours ago

வெள்ளம், புயல் போன்ற அனர்த்தங்கள் காரணமாக நாட்டின் 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக Météo-France அறிவித்துள்ளது.
Aisne, Ardèche, Gard, Hérault, Oise மற்றும் Somme ஆகிய 6 மாவட்டங்களுக்கு வெள்ளம் காரணமாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Isère, Rhône, Loire, Puy-de-Dôme, Haute-Loire, Ardèche, Aveyron, Tarn, Haute-Garonne, Pyrénées-Atlantiques மற்றும் Hautes-Pyrénées ஆகிய மாவட்டங்களுக்கு புயல் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ வேகம் வரை காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



