குற்றச் செயல்களுடன் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினருக்கும் தொடர்பு!
#SriLanka
Mayoorikka
10 hours ago

இந்த ஆண்டு மட்டும் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதில் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட ஐந்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த சம்பவங்களில் பொலிஸார் மற்றும் முப்படைகளின் உறுப்பினர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டுள்ளதாகவும், அதன்படி, அந்த அதிகாரிகளில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



