பகவத் கீதையுடன் FBI இயக்குநராக பதவியேற்ற காஷ் படேல்

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை மீது சத்தியம் செய்தபடி காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குனராக பதவியேற்றுக் கொண்டார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய காஷ் படேல், நான் அமெரிக்கக் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அமெரிக்க கனவு இறந்துவிட்டதாக நினைக்கும் எவரும், இங்கே பாருங்கள்.
உலகின் மிகப் பெரிய தேசத்தின் சட்ட அமலாக்க முகமைக்கு தலைமை தாங்கவிருக்கும் முதல் தலைமுறை இந்தியருடன் நீங்கள் பேசுகிறீர்கள்.
அது வேறெங்கும் நடக்காது. எப்.பி.ஐ-க்குள்ளும் அதற்கு வெளியேயும் பொறுப்பு இருக்கும் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



