வீடு ஒன்றில் இருந்து 02 ரிவால்வர்கள், தோட்டாக்கள் மற்றும் 02 வாள்களுடன் நபர் ஒருவர் கைது!
#SriLanka
#Arrest
#gun
Thamilini
10 months ago
வீடு ஒன்றில் இருந்து 02 ரிவால்வர்கள், தோட்டாக்கள் மற்றும் 02 வாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபராதுவ பொலிஸ் பிரிவின் வெல்லேகேவத்த பகுதியில் நேற்று (22) இரவு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லேகேவத்த பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிவால்வர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிவால்வர், 2 பிஸ்டல் தோட்டாக்கள் மற்றும் 2 வாள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
