தக்காளியை ஃப்ரிட்ஜில் வைப்பதால், அதன் உள் சவ்வு உடைந்து, சீக்கிரம் கெட்டுவிடும். இது தவிர, தக்காளி நன்கு பழுக்கும் போது எத்திலீன் வாயுவை வெளியிடும். ஆனால், குளிர்சாதன பெட்டியின் குளிர்ச்சி எத்திலீன் உற்பத்தியை நிறுத்திவிடும். இது தக்காளியின் சுவையை மாற்றி விடும்.
வெள்ளரிக்காயை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. இதனால், வெள்ளரிக்காயின் நீர் சத்து நீங்கி, கசப்ப்பு தன்மையும் ஏற்படும். இது தவிர வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்களும் அழிந்துவிடும்.
மசாலாப் பொருட்கள்: தூளாக்காமல் முழுமையாக இருக்கும் மசாலாப் பொருட்களை பிரிட்ஜில் வைத்தால், சுவை மணம் இரண்டும் பாதிக்கப்படலாம் என்கின்றனர் நிபுணர்கள். அவை ஈரப்பதத்தை இழுத்துக் கொள்வதே இதற்கு காரணம்.
உலர் பழங்கள்: பொதுவாக பலர் உலர் பழங்களை பிரிட்ஜில் வைப்பார்கள். எனினும் இதனை பிரிட்ஜில் வைக்க கூடாது என்கின்றனர் நிபுணர்கள். குளிர்ச்சி மற்றும் ஈரப்பதம் இரண்டும் உலர் பழங்களின் சுவையை பாதிக்கும்.
ப்ரெட்: பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகள் எதையுமே ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. இதன் சுவையும் மிருதுவான தன்மையும் நீடிக்க இது அவசியம். பிரிட்ஜில் வைத்தால் சுவை பாதிக்கப்படுவதோடு, மிருதுதன்மை நீங்கி விடும்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்