கிழக்கு மாகாணத்தில் சிவராத்தரி விசேட விடுமுறை வழங்கப்படவில்லை
#SriLanka
#Batticaloa
#Festival
Mayoorikka
10 months ago
சிவராத்திரியை உலக வாழ் இந்துக்கள் புதன்கிழமை (26) அனுஷ்டிக்கின்றனர்.
மறுநாள் வியாழக்கிழமை (27) வட, ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளைக் கொண்ட, இந்துக்கள் வாழும் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
