ஜனாதிபதி பதவியை விட்டு தர தயாராகும் ஜெலன்ஸ்கி

#Ukraine #Zelensky #President #NATO
Prasu
1 month ago
ஜனாதிபதி பதவியை விட்டு தர தயாராகும் ஜெலன்ஸ்கி

உக்ரைன்-ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். 

இதற்கிடையே, 'உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரிபோல் செயல்படுகிறார். இவர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக விட மாட்டார் என ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில், உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன். உக்ரைனுக்கு நோட்டோ உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். ரஷியாவின் முழுமையான படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு டிரம்ப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மிகவும் தேவை. உக்ரைன் மற்றும் ரஷியா இடையே டிரம்ப் மத்தியஸ்தராக இருக்க வேண்டும் என்றார் ஜெலன்ஸ்கி. 

நோட்டோ நாடுகளுக்கு நேட்டோ படைகள் பாதுகாப்பு தரும். குறிப்பாக நேட்டோ உறுப்பு நாட்டை யாராவது தாக்கினால், பதிலாக அனைத்து நேட்டோ நாடுகளும் ஆதரவாக வரும். இது தனக்கான பாதுகாப்பைத் தரும் என உக்ரைன் கருதுகிறது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740509014.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!