திருமணம் செய்யாதவர்களை பணி நீக்கம் செய்யும் சீன நிறுவனம்

சீன நிறுவனம் ஒன்றில் இருந்து ஒற்றையர்கள், விவாகரத்துப் பெற்ற ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர் என அதன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த நிறுவனத்தை அதிகாரிகள் குறைகூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து நிறுவனம் அந்தக் கொள்கையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
The Shuntian Chemical Group எனப்படும் நிறுவனம் தென் சீனாவில் உள்ள ஷண்டோங் மாநிலத்தில் அமைந்துள்ளது. 1,200க்கும் அதிகமான ஊழியர்கள் அங்கு வேலை செய்கின்றனர்.
நிறுவனத்தின் திருமண விகிதத்தை அதிகரிக்க அது புதிய கொள்கையை கடந்த மாதம் அறிவித்தது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



