GOLD CARD வழங்குவது தொடர்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அமெரிக்க குடியுரிமையை 5 மில்லியன் டாலர்களுக்கு விற்க நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.
தற்போது இலவச அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்காக 'கிரீன் கார்டு' லாட்டரி செயல்பாட்டில் உள்ள நிலையில், அமெரிக்க குடியுரிமைக்கு பணம் செலுத்த அனுமதிக்கும் 'தங்க அட்டை' முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அதிபர் டிரம்ப் கூறுகிறார்.
பணக்கார வெளிநாட்டினர் 5 மில்லியன் டாலர் கட்டணத்தில் அமெரிக்க குடியுரிமையைப் பெறலாம் என்றும், இது அவர்களுக்கு அமெரிக்காவில் வசிக்கவும், வேலை செய்யவும், வணிகம் செய்யவும் உரிமையை வழங்கும் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த புதிய 'தங்க அட்டை'யின் வெளியீடு சுமார் இரண்டு வாரங்களில் தொடங்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




