சூடானில் ராணுவ விமானம் விபத்து: 46 பேர் உயிரிழப்பு

#world_news #Sudan
Mayoorikka
1 month ago
சூடானில் ராணுவ விமானம் விபத்து: 46 பேர் உயிரிழப்பு

சூடானில் ராணுவ விமானம் கிளம்பும் போது நொறுங்கி விழுந்ததில் ராணுவ அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என 46 பேர் பலியானார்கள்.

 சூடானின் தலைநகரான கர்தூம் அருகே உள்ள ஓம்துர்மானில் உள்ள வாடி ஜெய்ட்வானா ராணுவ தளத்தில் இருந்து ராணுவ விமானம் ஒன்று கிளம்பியது. அப்போது திடீரென விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்தது. இதில் 46 பேர் பலியானார்கள். 

மேலும் சிலர் காயமடைந்தனர். இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்ததுடன், அப்பகுதியில் மின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

 இப்பகுதியில் அதிகமானோர் குடியிருந்து வருகின்றனர். தொழில்நட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740549479.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!