டிரம்ப்பை சந்திக்க அமெரிக்கா செல்லும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

உக்ரைன்-ரஷியா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நாளை மறுநாள் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி டிரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா செல்கிறார்.
அப்போது இருநாட்டு தலைவர்கள் ரஷியாவுடனான போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்காவுடன் பொருளாதார கூட்டாண்மையை இறுதி செய்வதற்காக கனிம ஒப்பந்தத்தில் டிரம்பும், ஜெலென்ஸ்கியும் கையெழுத்திடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



