தாய்லாந்தில் விபத்தில் சிக்கி கல்வி சுற்றுலா சென்ற 18 பேர் மரணம்
#Death
#Bus
#Thailand
Prasu
1 month ago

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் இருந்து கிழக்கே பிரச்சின்பரி மாகாணத்தில் இரட்டை மாடி கொண்ட பஸ் ஒன்று சாலையில் பயணித்து கொண்டு இருந்தது. அந்த பஸ்சில் 49 பேர் கல்வி சுற்றுலாவுக்காக சென்றிருந்தனர்.
இந்நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்தது. மலையில் இருந்து உருண்டது. இந்த விபத்தில், 18 பேர் பலியானார்கள். 31 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பிரேக் சரிவர பிடிக்காமல் பஸ் விபத்தில் சிக்கியிருக்க கூடும் என தகவல் தெரிவிக்கின்றது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



