நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி!

#SriLanka #Defense #AnuraKumaraDissanayake
Thamilini
1 year ago
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி!

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடல் இன்று (26) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

கடற்படையின் மூத்த அதிகாரிகளுடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, ​​இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், கடல் வழியாக ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மீதான சோதனைகள் உட்பட ஆழ்கடலில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விவாதங்கள் நடைபெற்றன.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட மற்றும் கடற்படையின் மூத்த அதிகாரிகள் குழு ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

images/content-image/1740620558.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4