கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் நடைபெறவுள்ள ஒன்டாரியோ மாகாண தேர்தல்

#Election #Canada #Climate #snowstorm
Prasu
1 month ago
கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் நடைபெறவுள்ள ஒன்டாரியோ மாகாண தேர்தல்

ஒன்டாரியோ மாகாண தேர்தல் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், நகரம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில வீதிகள் பனியில் மூழ்கியுள்ளன. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 140 ஆண்டுகளில் முதல் முறையாக, பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, கடுமையான பனிநிலையால் வாக்களிப்பு விகிதம் குறையுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஒட்டாவா, டொரொண்டோ உள்ளிட்ட நகரங்களில் பனிப் பிரச்சனை தொடர்பாக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து பணிபுரிந்துவருகிறோம் என ஒன்றாரியோ தேர்தல் நிறுவனத்தின் ஊடக பிரதானி க்ரெக் ஃப்ளட் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு மையங்கள் எங்கு அமைந்திருந்தாலும் அந்த இடங்களில் மக்கள் எளிதாக அணுகக்கூடிய சூழல் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

"வாக்களிப்பு மையங்களுக்குச் செல்லும் பாதைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது முக்கிய முன்னுரிமையாக கருதப்படுவதாக டொரோண்டோ நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


images/content-image/1740643994.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!