பிலிப்பைன்சில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் உயிரிழப்பு
#Death
#Accident
#Phillipines
#fire
#Building
Prasu
1 month ago

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் புறநகர் பகுதியான குயிசன் நகரில் உள்ள சான் இசிட்ரோ கலாஸ் கிராமத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பயங்கர தீ விபத்தில் முதல் தளத்தில் வசித்து வந்த 2 பேரும், 2வது தளத்தில் வசித்து வந்த 6 பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். கோடைக்காலம் தொடங்குவை முன்னிட்டு மார்ச் மாதம் அரசு தீ விபத்தை தடுப்பது குறித்து வழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



