10 அரசியல் கைதிகள் 85 வருடங்கள் சிறையில் வாடுகின்றனர்!

#SriLanka #sritharan
Mayoorikka
2 months ago
10 அரசியல் கைதிகள் 85 வருடங்கள் சிறையில் வாடுகின்றனர்!

பல காலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலை சபையில் சமர்ப்பித்த இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன், மனிதாபிமான அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

 பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) ந உரையாற்றுகையிலேயே சிறீதரன் எம்.பி குறித்த பெயர் பட்டியலை சமர்ப்பித்தார்.

 அதாவது கதிர்காமத் தம்பி சிவக்குமார், விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன், கிருஷ்ணசாமி ராமசந்திரன், சண்முகலிங்கம் சூரியகுமார், ஜோன்ஷன் கொலின் வெலன்டினோ, சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், ஏ.எச்.உமர் ஹதாப், தங்கவேலு நிமலன், செல்வராஜா கிருபாகரன், தம்பிஐயா பிரகாஸ் ஆகியோரில் இரண்டு பேர் 30 வருடங்களாகவும், மூவர் 17 வருடங்களும், ஒருவர் 22 வருடங்களாகவும் மற்றும் நான்கு பேர் 16 வருடங்களாக சிறையில் வாடுகின்றனர் என்றார்

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740676758.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!