பாகிஸ்தான் மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடித்ததில் ஐவர் மரணம்

#Death #Pakistan #BombBlast #Mosque
Prasu
1 month ago
பாகிஸ்தான் மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடித்ததில் ஐவர் மரணம்

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பகதுன்க்வாவில் உள்ள மசூதியில் பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பில் ஜமியாத் உலேமா இஸ்லாம் (JUI) அமைப்பின் தலைவர் ஹமிதுல் ஹக் ஹக்கானி உயரிழந்துள்ளார். 

ஹமிதுல் ஹக் ஹக்கானி 1968-ம் ஆண்டு, அவரது தந்தை உயிரிழந்த நிலையில் ஜே.யு.ஐ. அமைப்பின் தலைவர் ஆனார். 

இந்த தாக்குதல் மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கும் என கைபர் பகதுன்க்வா ஐ.ஜி. தெரிவித்துள்ளார். ஹமிதுல் ஹக்கை கொலை செய்யும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். கைபர் பகதுன்க்வா முதல்வர் மற்றும் கவர்னர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740771302.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!