முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு!

#SriLanka
Dhushanthini K
2 months ago
முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 அதிகாரிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகமவின் பெலேன பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, "வெலிகம பொலிஸ் அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட பாதுகாப்பு உரிமையின் அடிப்படையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என்றும், அதன்படி, அவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

இருப்பினும், கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளை இந்த இடத்திற்கு அனுப்பியது சட்டவிரோதமானது என்றும், அதன்படி, அன்றைய தினம் அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகளையும், அப்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரையும் கைது செய்து, இந்த வழக்கில் அவர்களை சந்தேக நபர்களாகக் குறிப்பிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்றும் தெரிவித்தார். என்று அவர் கூறினார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740811001.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!