கனேடிய அரசியலில் தலையிடும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா அரசியலில் தலையிடும் வகையில் புதிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா – கனடா வர்த்தக உறவுகளில் மிகப்பெரிய 25% இறக்குமதி வரியை விதிப்பதற்கான இறுதி திகதி மீண்டும் நெருங்கி வரும் நிலையில், கனடாவின் முன்னாள் நிதியமைச்சர் க்ரிஸ்டியா ஃப்ரீலாண்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேர்காணலில், கனடாவின் லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் க்ரிஸ்டியா ஃப்ரீலாண்டை "மிக மோசமானவர்" என டிரம்ப் திட்டியுள்ளார். மேலும், க்ரிஸ்டியா நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது தமது செயற்பாடுகளினாலேயே என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் தொடர்பிலும் ட்ரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



