உடல் எடையை குறைக்க இலகுவான 6 வழிகள்!

பாலிவுட் நடிகர் ஜெய்தீப் அஹ்லாவத் 5 மாதங்களில் 27 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார். ஸ்லிம்மாக இருக்கும் அவர், உடல் எடையை எப்படி குறைத்தேன் என்பது குறித்த டிப்ஸை பகிர்ந்து கொண்டிருக்கிறார். உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற முனைப்பு, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் இதனை சாதித்திருக்கிறார் அவர். உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் மன ஆரோக்கியம், உணவுமுறை, உடற்பயிற்சி ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என நடிகர் ஜெய்தீப் அஹ்லாவத் தெரிவித்துள்ளார்.
உடல் எடையை குறைக்க 6 பயிற்சிகள்
1. இலக்கு
நீங்கள் எடையை குறைக்க விரும்பினால் அந்த பயணத்தை தொடங்குவதற்கு முன் தெளிவான மற்றும் அடையக்கூடிய இலக்குகளை அமைக்கவும். விரைவான எடையை குறைக்கலாம் என்பதற்கு பல பயிற்சிகள் இருந்தாலும், அவை கவர்ச்சிகரமானவையே. எல்லோருக்கும் அந்த பயிற்சிகள் சாத்தியமில்லாமல் போகலாம். எனவே சீரான காலத்தில் உடல் எடையை குறைப்பது மட்டுமே சிறந்தது. வாரத்திற்கு 0.5 முதல் 1 கிலோ வரை எடையை குறைப்பதை இலக்காக கொள்ளவும்.
2. ஊட்டச்சத்துக்கு முன்னுரிமை
உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் எல்லோரும் தினமும் எவ்வளவு சாப்பிடுகிறோம், என்ன சாப்பிடுகிறோம், சாப்பிடும் பொருட்களின் கலோரி என்ன என்பதை கணக்கிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். போதுமான உணவு எடுத்துக் கொள்ளாமல் கலோரிகளை குறைப்பது என்பது தசை இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். வெறும் கலோரிகளை குறைப்பதற்குப் பதிலாக, புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த சீரான உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.
3. பயிற்சி
உடல் எடையை குறைக்க கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி இல்லாமல் எடை குறைப்பது என்பது பக்கவிளைவுகளை உண்டாக்கும். அல்லது சோர்வு போன்ற பிரச்சனைகளை கொண்டு வரவும் வாய்ப்பு இருக்கிறது. உடற்பயிற்சி அதற்கு ஏற்ப உணவு என்பதே உங்களின் உடல் எடை குறைப்பு பயிற்சிக்கு நல்லது.
4. உணவு முறை மாற்றம்
உடல் எடையை குறைக்க திட்டமிடுகிறீர்கள் என்றாலே கட்டாயம் உணவுமுறை மாற்றத்தை செய்தாக வேண்டும். ஏற்கனவே கூறியதுபோல் நார்ச்சத்து மிக்க உணவுகள், நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள், காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். செயற்கை சர்க்கரை உணவுகளை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட கெட்ட கொழுப்பு உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.
5. நீரேற்றமாக இருங்கள்
எடை குறைக்கும்போது நீங்கள் ஹைட்ரேட்டாக இருப்பது முக்கியம். சரியான நீரேற்றம் ஒரு பெரிய பங்கை வகிக்கிறது, ஏனெனில் இது செரிமானத்திற்கு உதவுகிறது, பசியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது. எடை இழப்பு மிக விரைவாக நிகழும்போது, உடல் எலக்ட்ரோலைட்டுகளையும் இழக்கிறது, இது சோர்வு, தசைப்பிடிப்பு மற்றும் தலைவலியை ஏற்படுத்தும்.
6. நல்ல தூக்கம்
தூக்கமின்மை மற்றும் அதிக மன அழுத்தம் ஆகியவை ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான ஏக்கத்தை அதிகரிக்கும். இதன் மூலம், பசியையும் வளர்சிதை மாற்றத்தையும் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தப்படும். முடிவில் உங்களின் எடை இழப்பு முயற்சிகள்தோல்வியில் முடிவடையும். எனவே தினமும், குறைந்தது 7-9 மணிநேரம் தரமான தூக்கத்தை இலக்காகக் கொள்ளுங்கள்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




