சராசரி மனிதனுக்கு உடலில் எவ்வளவு சர்க்கரை அளவு இருக்க வேண்டும்

#Health #sugar #people
Prasu
4 weeks ago
சராசரி மனிதனுக்கு உடலில் எவ்வளவு சர்க்கரை அளவு இருக்க வேண்டும்

இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவு பற்றி மாறுபட்ட கருத்துகள் உண்டு.சில ஆண்டுகளுக்கு முன் வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 120 மி.கி./100 மி்.லி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து 180 மி.கி/100 மி.லி.இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.

தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில் 100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அதைவிட அதிகமாக இருக்கும்போது உடலின் பல பாகங்களில் சர்க்கரை நோயின் பாதிப்பு தெரியத் தொடங்கி விடுவதால் அவ்வாறு சொல்லப்படுகிறது.

ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு 200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். 

கண்டிப்பாக ஒரு மாத்த்திற்கு ஒரு முறையோ இரண்டு மாத்த்திற்கு ஒரு முறையோ மருத்துவர் ஆலோசனையின்படி இரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.ஒன்றிரண்டு ஆண்டுகள் கூட மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்கலாம்.

உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு குறைவதனாலும் சுரந்தும் பயன்படாமல் போவதாலும்தான் சர்க்கரை நோய் வருவதால் அதை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது;கட்டுப் படுத்தி இயல்பான வாழ்க்கை வாழலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740862655.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!