நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - மக்களிடம் விசேட கோரிக்கை!
#SriLanka
#Fuel
Thamilini
10 months ago
நாட்டில் எந்த நேரத்திலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று (02.03) தொடர்ந்து நடைபெறும் என்று அதன் தலைவர் திரு. டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
மேல் மாகாணத்திலிருந்து ஏற்கனவே சுமார் 500 எரிபொருள் ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளதாகவும், வதந்திகளுக்குப் பயந்து மக்கள் பெட்ரோல் நிலையங்களுக்குச் சென்றால்தான் இந்தப் பிரச்சினை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
