அமெரிக்காவிற்கு செக் வைத்த நோர்வே : எரிபொருளை விநியோகிக்க மாட்டோம் என அறிவிப்பு!
#SriLanka
#America
#Norway
Dhushanthini K
4 weeks ago

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா ராணுவத்துக்கு தேவையான எரிபொருள் சப்ளையை நிறுத்துவதாக நோர்வே அறிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் இருந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அவமானப்படுத்தி அனுப்பியிருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் வகையிலும் மேற்படி நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வேயில் இயங்கும் ஹால்ட்பக் பங்கர்ஸ்' என்ற நிறுவனம் அமெரிக்காவின் ராணுவத்துக்கு ஆண்டுக்கு 30 லட்சம் லிட்டர் எரிபொருளை அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




