24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஆஸ்திரேலியர் மரணம்

ரத்த தானத்தின் மூலம் சுமார் 24லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88) காலமானார்.
Man with the golden arm என அறியப்படும் ஹாரிசன் நியூ சவுத் வேல்ஸ்சில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1954 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் ஹாரிசன் ரத்த தானம் கொடுக்க தொடங்கினார். அன்று தொடங்கி கடந்த 2018 இல் தனது 81 ஆவது வயது வரை 1,173 முறை ரத்த தானம் கொடுத்து ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.
அவரது ரத்த தானம் மூலம் உலகம் முழுவதிலும் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
ஹாரிசன் உடைய ரத்தத்தின் பிளாஸ்மாவில் ஆன்டி -டி (Anti-D) என்ற அரியவகை Antibody உள்ளது. இது பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைக்குப் பரவும் தீங்கு விளைவிக்கும் Antibody களை தடுக்கும் வல்லமை கொண்டது.
2005 முதல் கடந்த 2022 வரை அதிக ரத்த பிளாஸ்மா தானம் கொடுத்ததற்கான உலக சாதனையை ஹாரிசன் தன்வசம் வைத்திருந்தார். அதன் பின் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த சாதனையை முறியடித்தார்.
ஜேம்ஸ் ஹாரிசன் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



