அமெரிக்கா இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதித்த கனடா

சீனா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு அமெரிக்கா-கனடா வர்த்தக உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலடியாக, கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மார்ச் 4ஆம் திகதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடி என்ற வகையில் பார்க்கப்படுகிறது. அதேபோல், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவு கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்துள்ளது.
இந்த நிலையில், கனடாவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் அமெரிக்க வியாபாரிகள் பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்.
"அண்டை நாடுகளுடன் நட்புடன் இருந்தாலே தொழில் சாத்தியமாகும். இதை அமெரிக்க அதிபர் யோசிக்க வேண்டும்" என வணிக வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



