யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டி கைது!
#SriLanka
#Arrest
Thamilini
10 months ago
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்றைய தினம் காலை சென்றிருந்த போதே டெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட டெய்சி பொரெஸ்ட் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
