காசாவை மீண்டும் கட்டியெழுப்ப அரபு தலைவர்கள் ஒப்புதல்

#Country #Palestine #leader #Gaza #Arab
Prasu
4 weeks ago
காசாவை மீண்டும் கட்டியெழுப்ப அரபு தலைவர்கள் ஒப்புதல்

பாலஸ்தீன அதிகாரசபையின் எதிர்கால நிர்வாகம் காசா பகுதியை கட்டியெழுப்பும் திட்டத்தை அரபு தலைவர்கள் முன்மொழிந்துள்ளனர்.

காசாவை முழுமையாக கைப்பற்றி அதனை மீண்டும் கட்டியெழுப்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியை கட்டியெழுப்பி, அங்கு நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இவரது இந்த அறிவிப்புக்கு அரபு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பாலஸ்தீன அதிகாரசபை (PA) காசாவை ஆளும் வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை. எனினும், இஸ்ரேல் அந்த அமைப்பின் எதிர்காலத்தை நிராகரித்தது. மேலும் டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தின் போது வாஷிங்டனில் இருந்த பாலஸ்தீன விடுதலை அமைப்பின் அலுவலகத்தை மூடிவிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் மீண்டும் ஆட்சிக்கு திரும்பிய டொனால்டு டிரம்ப், சிறிது நேரத்திலேயே, அமெரிக்கா காசா பகுதியை "கையகப்படுத்தி" அதை மத்திய கிழக்கின் ரிவியராவாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார். 

மேலும், பாலஸ்தீன மக்களை எகிப்து அல்லது ஜோர்டானுக்கு இடம்பெயர கட்டாயப்படுத்தினார். இவரது கருத்து உலகளவில் பெரும் எதிர்ப்பை தூண்டியது. கெய்ரோவில் நடந்த அரபு லீக் உச்சிமாநாட்டில் அதிபர் டிரம்ப்ன் திட்டத்திற்கு மாற்று திட்டத்தை முன்மொழிந்தது.

முன்னதாக அதிபர் டிரம்ப்ன் கருத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரவேற்பதாக தெரிவித்து இருந்தார். உச்சிமாநாட்டின் நிறைவில், "விரிவான அரபுத் திட்டம்" ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.


பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


images/content-image/1741194971.jpg
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!