வடகிழக்கு மக்களுக்கு நீதிகிடைக்கவில்லை! வணபிதா ஜீவநந்த பீரிஸ்

#SriLanka
Mayoorikka
1 year ago
வடகிழக்கு மக்களுக்கு நீதிகிடைக்கவில்லை! வணபிதா ஜீவநந்த பீரிஸ்

வடகிழக்கு மக்களுக்கு அன்று முதல் இன்றுவரை நீதிகிடைக்கவில்லை தற்போது புதிதாக வந்துள்ள இந்த அரசாங்கம் கூட இன்னும் செவிமடுக்காத நிலையில் இருக்கின்றது எனவே இந்த அசாதாரண நியாயமில்லாத இந்த முறையை மாற்றுவதற்காக உண்மையான மாற்றத்தை கொண்டு வருவதற்காக நாங்கள் தொடர்ந்து போராட்டங்கள் கோரிக்கைகளை செய்து வருகின்றோம் என மக்கள் பேரவைக்கான இயக்கம் வணபிதா ஜீவநந்த பீரிஸ் தெரிவித்தார்.

 மட்டக்களப்பில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரையும் வியாழக்கிழமை (06) நீதிக்கான நடை பயணத்தின் 1030 வது நாள் போராட்டத்தில் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினர்கள் பௌத்ததேரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 காலிமுகத்திடல் அறக்கலை போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் நீதிக்கான பயணம் தொடர்ந்து 1030 வது நாளாக இடம்பெற்றுவருகின்றது அந்தவகையில் வடக்கு கிழக்கில் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி அவர்களுக்கான இடங்கள் அன்று முதல் இன்றுவரை கிடைக்கப்படவில்லை அனைத்து மக்களையும்விட அதிகமாக வடகிழக்கு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதை கருத்தி; கொள்ளவேண்டும் எனவே அந்த மக்களின் நோக்கத்தை கூட தற்போது புதிதாக வந்துள்ள இந்த அரசாங்கம் கூட இன்னும் செவிமடுக்காத நிலையில் இருக்கின்றது. 

எனவே அந்த மக்களின் நோக்கத்துக்காக மக்கள் பேரவைக்கான இயக்கமாகிய நாங்கள் அன்றும் இன்றும் தொடர்ந்து பேராடிவருகின்றோம் அதை வலியுறுத்து வதற்காக இந்த தொடர்ச்சியான நடைபாதை போராட்டங்கள் கோரிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 இந்த அசாதாரண நியாயமில்லாத இந்த முறையை மாற்றுவதற்காக உண்மையான மாற்றத்தை கொண்டு வருவதற்காக மக்களாகிய நாங்கள் ஒன்றுபடவேண்டும் என்றார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


images/content-image/1741229635.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4