இங்கிலாந்தில் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு எதிராக போராட்டம்

#India #Protest #Minister #England #Foriegn #Khalisthan
Prasu
1 month ago
இங்கிலாந்தில் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு எதிராக போராட்டம்

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். லண்டனில் உள்ள சாட்தம் ஹவுஸ் கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய் சங்கர் கலந்து கொண்டார். அப்போது அந்த கட்டிடத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் காலிஸ்தான் கொடிகளை ஏந்தியப்படி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். போராட்டம் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே வந்த ஜெய்சங்கர் காரில் ஏறினார். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். 

திடீரென்று ஒரு நபர், ஜெய்சங்கரின் காரை நோக்கி ஓடினார். அவர் தனது கையில் தேசிய கொடியை வைத்திருந்தார். கார் முன்பு ஆவேசமாக கோஷமிட்டப்படி தேசிய கொடியை கிழித்தார். உடனே அந்த நபரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்images/content-image/1741232149.jpg

images/content-image/1741278792.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!