இஸ்ரேலின் புதிய ராணுவ தளபதியாக இயல் சமீர் பதவியேற்பு

#Israel #Military #Commander
Prasu
3 weeks ago
இஸ்ரேலின் புதிய ராணுவ தளபதியாக இயல் சமீர் பதவியேற்பு

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்கு புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்த போரில் காசா முனையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனிடையே, இஸ்ரேல் ராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தவர் ஹர்சி ஹலிவி.

ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஹர்சி ஹலிவி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், ஹமாசுக்கு எதிரான போர் நீடித்து வந்ததால் தொடர்ந்து அவர் பதவியில் இருந்தார். அதேவேளை, மார்ச் 5ம் தேதியுடன் ராணுவ தளபதி பதவியில் இருந்து விலகுவதாக ஹர்சி ஹலிவி தெரிவித்தார்.

இதையடுத்து, புதிய ராணுவ தளபதியை தேர்ந்தெடுக்க இஸ்ரேல் அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதன்படி, புதிய ராணுவ தளபதியாக இயல் சமீர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இயல் சமீர் இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தளபதி இயல் சமீர், ஹமாசுக்கு எதிரான போரில் வெற்றியை உறுதி செய்வேன். ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தி செல்லப்பட்டுள்ள பணய கைதிகள் அனைவரையும் மீட்பேன்' என்றார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741284316.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!