உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 23 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

#Lanka4 #Numerology
Prasu
3 weeks ago
உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 23 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

பலவிதமான  வெற்றிகளை தரும் மோகன சக்திகளை கொண்டது . புதனின் புதனின் வீடான மிதுன ராசியில் வரும் இந்த 23 ம்  புதனின் ஆட்சி பலத்தை குறிக்கும் அற்புதமான அதிர்ஷ்டத்தை வாரி இறைக்கும் ஒரு எண்ணாகும் . பணம், பதவி, கௌரவம், அந்தஸ்து என்று எல்லாவற்றையும் தரும் வலிமை கொண்டது .

அரசனின் செங்கோலை குறிக்கும் எகிப்திய சித்திரங்கள் இந்த எண்ணை குறிக்கும் வகையில் காணப்படுகிறது . " சக்தி ரூபமாகவும் " மந்திரமாகவும் இந்த 23ம்  வருணிக்கபடுகிறது .

"சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கமாகவும் சர்வ சம்பத்தையும் இந்த எண் வழங்குவதாக சக்தியின்தேவியின் புகழ் பாடும் "சௌந்தர்யா லஹரி " குறிப்பிடுகிறது.

2 என்ற சந்திரனும் 3 என்ற குருவும்  ஒன்று சேர்ந்து 23 என்று புதனின் ஆதிக்கத்தை வெளிபடுட்டுவதால் இவர்கள் போடுகின்ற திட்டங்கள் எல்லாம் வெற்றி பெரும்.

எண்ணுகின்ற எண்ணங்களில் திண்ணமுடன் வெற்றியும் உலகோர் பிரமிக்கும்படியான சாதனைகளும் ராஜ வசியமும் விதியை மாற்றி அமைக்கும் விந்தையும் இந்த எண்ணில் புதைந்து கிடக்கிறது .

வியாபார விலாசமோ ஒரு மனிதனின் பெயரிலோ இந்த 23 ம் வருமேயானால் உயரிய பதவியில் உள்ளவர்களின் ஆதரவும், ஆட்சி பீடத்தில் உள்ளவர்களது தொடர்பும் உண்டாகும்.

 "சக்தியானது  இவர்களின்  உள்ளே உற்கார்ந்து சாதனைகளை செய்ய தூண்டி விடும். " ஜோதிடம், விஞ்ஞானம், கணிதம், இசை, தத்துவம்  போன்ற துறைகளில் வெற்றி ஏற்படும்.

வீடு, வாகனம், குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும். மிகபெரிய திட்டங்களை போட்டு முயற்சி செய்தால் மாபெரும் மனிதராக திகழ வைக்கும் . எல்லா வளங்களை இந்த 23 ம் எண் வழங்கினாலும் சோம்பல் நிறைந்த மன நிலை உண்டாகும்.

 8 - 17 - 28 - இந்த தேதியில் பிறந்தவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு எண் 8 க வருபவர்களும் இந்த 23 ம் எண்ணில் பெயரை அமைத்து கொண்டால் விதியை வெல்லலாம். ஆனால் இப்படி அமைத்து கொள்ள ஜோதிடரின் ஆலோசனை அவசியம்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741289704.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!