சிரியப் படைகள் மற்றும் அசாத் ஆதரவாளர்கள் இடையே மோதல் - 70 பேர் மரணம்

சிரியாவில் ராணுவப் படைகளுக்கும் முன்னாள் அதிபர் பஷார் அல்-அஸாட்டின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
முன்னாள் அதிபர் அஸாட்டின் ஆட்சி கடந்த டிசம்பர் மாதம் கவிழ்க்கப்பட்டதை அடுத்து நடந்த கலவரங்களில் இதுவே ஆக மோசமானதாகக் கருதப்படுகிறது.
இந்த மோதல் காரணமாக லடாக்கியா, டார்டுஸ் ஆகிய கரையோர நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லட்டாக்கியா நகரில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரசாங்க அதிகாரிகளைக் கிளர்ச்சியாளர்கள் சுற்றி வளைத்ததை அடுத்து கலவரம் வெடித்தது. கலவரத்தில் உயிரிழந்தோரில் நால்வர் பொதுமக்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலர் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்ததாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இந்த வாரத் தொடக்கத்தில் சிரியாவின் புதிய அரசாங்கம் முன்னாள் அரசாங்கத்தின் வசம் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிப்பத்தில் உறுதியுடன் இருப்பதாகச் சொன்னது.ஆனால், அஸாட் அரசாங்கம் அத்தகைய ஆயுதங்கள் எதையும் 14 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரில் பயன்படுத்தவில்லை என்று மறுத்தது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



