தென் கொரிய ஜனாதிபதியை சிறையில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

#Prison #President #SouthKorea #release
Prasu
3 weeks ago
தென் கொரிய ஜனாதிபதியை சிறையில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலின் கைது ஆணையை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.இதன் மூலம் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதிபர் யூனைத் தடுப்புக் காவலில் வைத்திருக்க குறிப்பிட்ட சில காலம் வழங்கப்பட்டதாகவும் அந்த காலக்கெடு முடிந்த பிறகு அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதாகவும் நீதிமன்றம் கூறியது.

தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்றதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டு அதிபர் யூன் ஜனவரி மாதம் 15ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார்.

அதிபர் யூன், பதவியில் இருக்கும்போது கைது செய்யப்பட்ட முதல் தென்கொரிய அதிபராவார். “அதிபர் யூனின் கைது ஆணையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தென்கொரியாவில் சட்ட ஒழுங்கு இருப்பதை இது காட்டுகிறது,” என்று அதிபர் யூன்னின் வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதற்கிடையே, தீர்ப்பை எதிர்த்து அரசாங்க வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்பதால் யூன் உடனடியாக விடுவிக்கப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741375961.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!